மர்ம விலங்கு கடித்து 26 ஆடுகள் பலி

 

ஊத்தங்கரை, ஜன.6: ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது, 11 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தது. இதேபோல், அதே கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு, சின்னகண்ணு ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்து கிடந்தன. மொத்தமாக 26 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து பலியாகி உள்ளன. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள், சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளை பரிசோதனை செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், ஆடுகளை கடித்த மர்ம விலங்கை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

The post மர்ம விலங்கு கடித்து 26 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: