கிருஷ்ணகிரி, ஜன.6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த உதவி மருத்துவர் பணிக்கான தேர்வில் 636 மருத்துவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி மருத்துவர் (பொது) பணிக்கான தேர்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, காத்தான்பள்ளம் கொன்சகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போச்சம்பள்ளி விநாயகா பல்தொழில்நுட்ப கல்லூரி, கோனேரிப்பள்ளி பெருமாள் மணிமேகலை பொறியல் கல்லூரி, மிட்டப்பள்ளி பிஎஸ்வி பொறியியல் கல்லூரி என 7 மையங்களில் நடந்தது.
இந்த தேர்விற்கு அனுமதிக்கப்பட்டிருந்த 841 தேர்வர்களில், 636 மருத்துவர்கள் தேர்வு எழுதினர். இதில், அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நடந்த தேர்வினை, கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட எஸ்பி தங்கதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post உதவி மருத்துவர் பணிக்கான தேர்வு appeared first on Dinakaran.