அதை மாற்றி மக்கள் தேவைகளை அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று அதை சரி செய்யும் பணிகளை தொடங்கி இருக்கிறோம். கடந்த டிசம்பர் 1ம் தேதி மழையில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர், அதை முதலமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு இன்று மாலை அந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளது. பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்து கண்டிக்கத்தக்கது. கரைந்து கொண்டு இருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது.
எதையாவது பேசி கொண்டிருந்தால்தான் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை கொச்சைப்படுத்தனால்தான் தன் பெயர் அடையாளப்படும் என்று செய்கிறார். கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது தான் நல்லது. தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
The post மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி மலிவான அரசியல் நாம் தமிழர் கட்சி கரையும் இயக்கமாக மாறி வருகிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.