என்னுடைய மயிலாப்பூர் தொகுதியிலே பிறந்ததாக கருதப்படும் அய்யன் திருவள்ளுவர் கோயிலின் திருப்பணியின் தற்போதைய நிலை குறித்து தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “வான் புகழ் அய்யனுக்கு கன்னியாகுமரியில் சிலை வைத்தார் மறைந்தும் மறையாமல் வாழ்கின்ற கலைஞர். சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கின்ற திருவள்ளுவர் திருக்கோயில் என்பது கலைஞரால் பாலாலயம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்ட திருக்கோயிலாகும்.
தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் திருவள்ளுவரின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வகையில் ஒரு திருக்கோயிலை உருவாக்குகின்ற பணி ஒப்பந்தம் கோரப்பட்டு நிறைவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் முதல்வரின் கரங்களால் அந்த திருக்கோயிலுடைய திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு உத்தரவின் பேரில் ரூ.27 கோடியில் கண்ணாடி இணைப்பு பாலம் அமைத்ததை இன்றைக்கு உலகமே பாராட்டிக் கொண்டிருக்கின்றது. கன்னியாகுமரிக்கு ஒரு பாராட்டு என்றால் சென்னையில் அமைய இருக்கின்ற திருவள்ளுவர் சிலைக்கு நிச்சயம் கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் எங்கள் திராவிட மாடல் நாயகன் புகழ் எந்நாளும் பாடப்படும்” என்றார்.
The post மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலின் திருப்பணிகள் இந்த மாத இறுதிக்குள் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும்: திமுக எம்எல்ஏ த.வேலு கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.