கல்லூரி மாணவி, இளம்பெண் மாயம்

காரிமங்கலம், ஜன.10: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் திருமால். இவரது மகள் கிருத்திகா (20), தனியார் பெண்கள் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக கல்லூரிக்கு செல்லாத நிலையில், 2 நாட்களுக்கு முன், வீட்டை விட்டு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், பொம்மஅள்ளி பகுதியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி மகள் அபிநயா (24). சப்பாணிப்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற அபிநயா, பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், தகவல் கிடைக்காததால் அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி, இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: