அதனடிப்படையில், இன்று சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில் முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்ததையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக அனைத்து நியாயவிலைக் கடைகளும் நாளை (ஜன.10) செயல்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.