திருச்சி, ஜன.9: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த டிச.31ம் தேதியோடு 5 வருடம் முடிவடைந்திருக்க வேண்டும். முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று 10ம் வகுப்பு தோ்ச்சியின்மை மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2, பட்டம் பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் தகுதி உடையவர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு, எழுதப்படிக்க தொிந்தவா், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டம் பெற்ற பதிவு செய்து டிச.31ம் தேதியோடு ஓராண்டு முடிவடைந்த விண்ணப்பதாரர்கள் தகுதி உடையவர்கள். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினா் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெருபவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு இல்லை. அரசின் முதியோர் உதவித்தொகை பெறுபவர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. பயன்தாரா் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதி உள்ளவர்களுக்கு தமிழ்நாட அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
உதவித்தொகை விவரம்: 10ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200ம், பிளஸ் 2 தேர்ச்சி – ரூ.400ம், பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.600ம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதப்படிக்க தொிந்த மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600ம், மாற்றுத்திறனாளிகள் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750ம், மாற்றுத்திறனாளிகள் பட்டம் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000ம் (சிறப்பு தேர்வாக மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மாதாந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.) உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேற்கண்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி, மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்பஅட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பத்தை திருச்சி மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம். விண்ணப்பதாரர் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில், சுயதொழில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராக இருக்க கூடாது. ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவா் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை என தொிவிக்கப்படுகிறது.இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
The post திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.