×

திமுக பாக நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 

கூடலூர், ஜன.6: கூடலூர் ஒன்றியம் ஓவேலி மற்றும் தேவர் சோலை பேரூர் கழகப் பகுதிகளில் பாக நிலை முகவர்கள் மற்றும் பாக நிலை குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூடலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பரமேஸ்குமார் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி, கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி, தேவர் சோலை பேரூர் கழக செயலாளர் மஞ்சமூலை சுப்பிரமணி, ஓவேலி பேரூர் கழக செயலாளர் சின்னவர், ஓவேலி பேரூராட்சி தலைவி சித்ராதேவி, தேவர் சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக உறுப்பினர்கள், பாகநிலை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

The post திமுக பாக நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Gudalur ,Oveli ,Thevar Solai Perur ,Gudalur Union ,Gudalur Assembly ,Paramesh Kumar… ,Dinakaran ,
× RELATED வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி போலீசார் தீவிர விசாரணை