- சென்னை உயர் நீதிமன்றம்
- தலைமை நீதிபதி
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்
- சென்னை
- தலைமை நீதிபதி
- பி.எஸ்.அமல்ராஜ்
- துணை தலைவர்
- வி.கார்த்திகேயன்
- அகில இந்திய பார் கவுன்சில்
- எஸ்.பிரபாகரன்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி.கார்த்திகேயன் மற்றும் அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அளித்துள்ள கடிதத்தில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் 66 நீதிபதிகள் உள்ளனர். ஒட்டுமொத்த நீதிபதி பதவியிடங்களின் எண்ணிக்கை 75 ஆகும்.
இந்நிலையில், இந்த ஆண்டு 10 நீதிபதிகள் ஓய்வுபெற உள்ளனர்.
இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் ஏற்பட உள்ளது. நீதிபதிகள் பதவிக்கான காலியிடங்களை விரைந்து நிரப்பினால் மக்களுக்கு விரைவான மற்றும் தடையற்ற நீதி நிர்வாகத்தை வழங்க முடியும். எனவே, தலைமை நீதிபதி மற்றும் கொலீஜியத்தில் பங்கேற்கும் நீதிபதிகள் சிறுபான்மையினர், பெண்கள் உள்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களை அவர்களின் தனிப்பட்ட சட்ட அறிவு, நேர்மை, திறமையின் அடிப்படையில் பரிசீலிக்குமாறு ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமுதாயத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவிக்கான பெயர்களை கொலீஜியம் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யும் போது நீதித்துறையில் சமூக பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
The post சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.