திருத்தணி: திருத்தணியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெறுகிறது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம், திருத்தணி – அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும், மின்சார சேவைகள் பெற மனுவாகவும் வழங்கி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
The post திருத்தணியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் appeared first on Dinakaran.