- கிழக்கு கடற்கரை சாலை
- திருத்துறைப்பூண்டி ரயில்வே மேம்பாலம்
- திருத்துறைப்பூண்டி
- தூத்துக்குடி
- திருவாரூர் மாவட்டம்
- திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி ரயில்வே மேம்பாலம்
- பாண்டி
- தின மலர்
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி ரயில்வே மேம் பாலம் முதல் பாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலை சேதமடைந்து குண்டு குழியுமாக உள்ளது. இந்தப்பகுதி வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தூத்துக்குடி, சாயல்குடி, இராமநாதபுரம், தொண்டி, மீமிசல், தேவிப்பட்டினம், கட்டுமாவடி, சேதுபாசத்திரம், அதிராபட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம்,நாகூர், காரைகால், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக சென்னை செல்ல கிழக்கு கடற்கரை சாலை 16 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விரைந்து செல்லவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போவதற்கும் இந்த சாலையை பயன்படுத்துக்கின்றனர். தினந்தோறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாகனம் வரை சென்று வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையில் கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி ரயில்வே மேம்பாலம் அருகே சாலை சேதமடைந்து சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் சாலையில் இரவு நேரங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக தற்போது பள்ளத்தில் நடுவே மரக்கிளைகள் வைக்கப்பட்டுள்ளது. மழையால் சேதமடைந்த கிழக்கு கடற்கரை சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருத்துறைப்பூண்டி ரயில்வே மேம்பாலம் அருகே குண்டும் குழியுமாக உள்ள கிழக்கு கடற்கரை சாலை: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.