டெல்லி: துருவ் வகை ஹெலிகாப்டர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதை அடுத்து முழுமையாக பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துருவ் வகை ஹெலிகாப்டர்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ராணுவத்தில் 330 துருவ் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்திய ராணுவத்தில் உள்ள அனைத்து துருவ் வகை ஹெலிகாப்டர்களும் இயக்கப்படாமல் நிறுத்திவைகைப்பட உள்ளது. கடந்த ஞாயிறன்று துருவ் ஹெலிகாப்டர் குஜராத் மாநிலத்தில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
The post துருவ் வகை ஹெலிகாப்டர்கள் இயக்கம் நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.