×

தென்பெண்ணையாறு நீர் பிரச்சனை குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முயற்சி செய்து வருகிறோம்: டி.கே.சிவகுமார்

தென்பெண்ணையாறு நீர் பிரச்சனை குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முயற்சி செய்து வருகிறோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுடன் மேல் பத்ரா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பென்னார் நதிப் படுகையில் உத்தேச அணைக்கு தமிழகத்தின் ஆட்சேபனை குறித்து விவாதித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார் கூறியதாவது:

தென்பெண்ணையாறு நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் ஜனவரி 2ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. நாங்கள் மூன்று வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும், ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் காரணமாக அது தாமதமானது. நாங்கள் நீட்டிப்பு கேட்டுள்ளோம். தமிழக-கர்நாடக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதி இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இரு மாநிலங்களையும் அழைத்து அணை கட்டுவது குறித்து பேசுவதாக ஒன்றிய அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார். தென்பெண்ணையாறு பிரச்சனைக்கு நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டால் காலதாமதமாகும் எனவும் தெரிவித்தார்.

The post தென்பெண்ணையாறு நீர் பிரச்சனை குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முயற்சி செய்து வருகிறோம்: டி.கே.சிவகுமார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,South Africa ,D. K. Shivakumar ,Karnataka ,Deputy Chief Minister ,T. K. Shivakumar ,Deputy First Minister ,Minister of Irrigation ,Union ,Minister ,Somanna ,Upper Badra ,D. K. Sivakumar ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!