கடுகூர் ஊராட்சி பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

 

அரியலூர், ஜன. 6: கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட க.பொய்யூர், தலையாரி குடிக்காடு, பூமுடையான் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஆறாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை கடுகூர் ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் தொடங்கி வைத்தார். அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் முருகேசன் முன்னிலையில், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த 62 பயனாளிகளின் 400 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தினர். முகாம் முடிவில் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் கோமாரி நோய் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கையேடுகள் விநியோகம் செய்யப்பட்டது.

The post கடுகூர் ஊராட்சி பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: