பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் ஆண்டாள் கொண்டை அலங்காரத்தில் பெருமாள் சேவை

பெரம்பலூர்,ஜன.4: பெரம்பலூர் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு பெருமாள் ஆண்டாள் கொண்டை அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பெரம்பலூரில் நகராட்சி தெப்பக்குளம் அருகே உள்ள  மரகதவல்லி தாயார் சமேத  மதன கோபால சுவாமி திருக் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவில் பகல் 10, நான்காம் நாளான நேற்று(03ஆம்தேதி)மாலை 5:10 மணியளவில் பெரு மாள் ஆண்டாள் கொண்டை அலங்காரத்தில் எழுந் தருளி மங்கள வாத்தியம் முழங்க திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்துபக்தர்களுக்கு சேவை சாதித்தார். நிகழ்ச்சிகளில், கோயில் செயல் அலுவலர் கோவிந் தராஜன்,.முன்னாள் அறங் காவலர் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், கீற்றுக் கடை குமார் மற்றும் பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம், எளம்பலூர், நெடுவாசல், விளாமுத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்ட னர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.

The post பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் ஆண்டாள் கொண்டை அலங்காரத்தில் பெருமாள் சேவை appeared first on Dinakaran.

Related Stories: