தொண்டி, ஜன.7: தொண்டியில் வெடி மருந்து பறிமுதல் வழக்கில் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் ஆகாதவரை தொண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொண்டி வட்ட கேணி பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு ஜெலட்டின் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இப்பகுதியை சேர்ந்த கார்மேகம், துரைப்பாண்டி மற்றும் வெடிபெருள்களை விற்பனை செய்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள காரங்குடா பகுதியை சேர்ந்த முத்தரசன் (எ) முத்துகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து கோர்டில் ஆஜர் ஆகாததால் முத்தரசனை நேற்று தொண்டி போலீசார் கைது செய்து ராமநாதபுரம் ஜெயிலில் அடைத்தனர்.
The post வெடிமருந்து வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது appeared first on Dinakaran.