சின்னவநாயக்கன்பட்டியில் ₹16.55 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

விளாத்திகுளம், ஜன. 7: சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை மார்க்கண்டேயன் எம்எல்ஏ திறந்துவைத்தார். புதூர் அருகே சின்னவநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ₹16.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்து அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் புதூர் பிடிஓக்கள் அரவிந்த், வெங்கடாசலம், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சரளாதேவி, திமுக ஒன்றியச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, அன்புராஜன், பேரூர் செயலாளர் மருதுபாண்டியன், பஞ். தலைவர் எர்ரையா, வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி, கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், புதூர் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்துராஜ், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் மற்றும் கிராமமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post சின்னவநாயக்கன்பட்டியில் ₹16.55 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: