×

அரிவாள் உற்பத்தியாளர்கள் வழக்கு: டிஜிபி, எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அரிவாள், கத்தி உற்பத்தி செய்யும் பட்டறை தொழிலாளர்களை போலீஸ் தொந்தரவு செய்வதாக தொடர்ந்த வழக்கில் டிஜிபி, எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த சேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அரிவாள், கத்தி போன்றவற்றை விற்பனை செய்யும்போது அதில் போலீஸ் தலையிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் சுத்தி, அரிவாள் விற்பனை செய்வதற்கு தென்காசி எஸ்.பி. அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாக மனுதாரர் குற்றச்சாட்டு வைத்தார். இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி தொழிலாளர்களை போலீஸ் தொந்தரவு செய்வதாக தொடர்ந்த வழக்கில் டிஜிபி, எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

The post அரிவாள் உற்பத்தியாளர்கள் வழக்கு: டிஜிபி, எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sickle ,Madurai ,Madurai HC ,Sekar ,Tenkasi ,Dinakaran ,
× RELATED குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து...