சென்னை: ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படம் தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஜனவரி 10ஆம் தேதி கேம் சேஞ்சர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதே வேளையில் இந்தியன் 3 படத்தை முழுவதுமாக முடித்து கொடுக்காமல் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட கூடாது என லைகா நிறுவனம் தற்போது தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளது.
இதனடிப்படையில் சங்கர் தரப்பிடமும், லைகா தரப்பிடமும் கடந்த சில நாட்களாகவே தமிழ் திரைப்பட சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாடு உரிமை மிக பெரும் தொகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு தொடங்காமல் உள்ளது. இதனால் இப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் இந்தியன்-2 படம் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியன் 3 காக காட்சிகளை படமாக்க மேலும் ரூ.65 கோடி தொகை கேட்டிருப்பதாகவும் அந்த தொகை ஏற்புடையதாக இல்லை என லைகா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனடிப்படையில் இந்தியன் 3யை முடித்து கொடுக்காமல் கேம் சேஞ்சர் திரைப்படத்தை வெளியிட கூடாது என லைக்கா நிறுவனம் புகார் அளித்துள்ளது. அதனடிப்படையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை என்பதும் நடைபெற்று வருகிறது. இதனால் கேம் சேஞ்சர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு மறைமுக ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படம் தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல்..!! appeared first on Dinakaran.