பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், கர்லம்பாக்கம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் உள்ள 5 தெருக்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, சாலை சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இந்த சாலைகளில் சென்று வர பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து காயமடைகின்றனர். இந்நிலையில், கிராமத்தில் உள்ள பஜனை கோயில் தெருவுக்கு நடுவில் கழிவு நீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட கவர் ஸ்லாப் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைந்தது.
கால்வாய் ஸ்லாப் உடைந்ததால் ஏற்பட்ட குழியில், இரவு நேரங்களில் அவ்வழியாக சென்று வரும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள கழிவுநீர் கல்வாய் ஸ்லாப்பை மூடவும், கிராம சாலைகளை சீரமைக்கவும் கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post பள்ளிப்பட்டு அருகே கழிவுநீர் கால்வாய், சாலையை சீரமைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.