செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள், அவர்களுக்கான உதவியாளர்கள், பார்வையாளர்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் இந்த மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் காவலாளிகள் சுழற்சி முறையில் 24மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். மேலும், சூழ்நிலையில் காவலாளிகளையும் மீறி மருத்துவமனை வளாகத்தில் ஆடு, மாடு, நாய் மற்றும் பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் சர்வசாதாரணமாக நுழைந்து விடுகிறது.
இந்நிலையில், நேற்று காலை அரசு மருத்துவமனையில் `தாய் வார்டு’ என்றழைக்கப்படும் பிரசவ வார்டு நுழைவாயிலில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் 10க்கும் மேற்பட்ட எருமைமாடுகள் நுழைந்ததால், அங்கிருந்தவர்கள் பீதியைடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு, மருத்துவமனைக்குள் நுழையும் மாடுகள் நம்மை முட்டிவிடுமோ என்ற அச்சத்தில், கர்ப்பிணி பெண்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.மேலும் இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான பாதுகாப்பில்லை எனவும், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
The post அரசு மருத்துவமனையில் புகுந்து எருமை மாடுகள் அட்டகாசம்: பீதியில் நோயாளிகள் appeared first on Dinakaran.