தியாகதுருகம் அருகே சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

 

தியாகதுருகம், ஜன. 6: தியாகதுருகம் அடுத்த நாகலூர் பகுதியில் சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. அரியலூர் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சிமெண்ட் மூட்டைகளுடன் லாரி வந்து கொண்டிருந்தது. கும்பகோணத்தை சேர்ந்த அசாருதீன் என்பவர் லாரியை ஓட்டினார். தியாகதுருகம் அருகே உள்ள விருகாவூர் பகுதியில் வந்தபோது சாலையில் விவசாயிகள் காய வைத்திருந்த உளுந்து மூட்டையில் லாரியின் சக்கரம் உரசியது.

இதில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் அங்கு விரைந்து வந்த தியாகதுருகம் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக போராடி லாரியில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஈச்சர் லாரியில் தீப்பிடித்து எரிய தொடங்கியதும் ஓட்டுநர் அசாருதீன் லாரியிலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த தீ விபத்து காரணமாக கள்ளக்குறிச்சி-விருகாவூர் சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post தியாகதுருகம் அருகே சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: