வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

ரெட்டிச்சாவடி, ஜன. 5: கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், கடலூர் ஒன்றிய பகுதிகளில் செல்லஞ்சேரி, தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம், குமாரமங்கலம் மற்றும் ரெட்டிச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களும் பாதிப்புக்கு உள்ளாகின. இதற்கிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐயப்பன் எம்எல்ஏ ஆய்வு செய்து, சாலை மற்றும் நிலங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினார்.

இதேபோல கடலூர் ஒன்றியம் காரணப்பட்டு பகுதியில் ஐயப்பன் எம்எல்ஏ ஆய்வு செய்து, சேதமான சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, மளிகை, போர்வை உள்ளிட்ட நிவாரண தொகுப்புகளை வழங்கினார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பிரகாஷ், துணை தலைவர் கலியமூர்த்தி, நிலவள வங்கி தலைவர் கே.வி.எஸ் ராமலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வேலன் சில்க்ஸ் வேல்முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், தொமுச ஆறுமுகம், நிர்வாகிகள் பார்த்திபன், விநாயகம், சுதாகர், முருகவேல், நந்தன், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி appeared first on Dinakaran.

Related Stories: