கோவை, ஜன.6: கோவை மாவட்டத்தில் சுமார் 11.50 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. 1405 ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் ரேஷன் பொருட்கள் தடையின்றி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலத்தினர், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புலம் பெயர்ந்து கோவையில் அதிகளவு வசிக்கின்றனர். இவர்களுக்கு ரேஷன் கடைகளில் தடையின்றி பருப்பு, அரிசி, பாமாயில், சர்க்கரை, கோதுமை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதி ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வடமாநிலத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் ரேஷன் கடைகளில் கோதுமை கூடுதலாக ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், மாநிலத்தை சேர்ந்தவர்களும் கோவையில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரே கார்டு, ஒரே ரேஷன் திட்டத்தில் உணவு தானியம் வழங்கினால் அதற்கான ஒதுக்கீடு முறையாக இருக்க வேண்டும். இதை வழங்கல் பிரிவினர் உறுதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
The post வடமாநிலத்தினருக்கு கோதுமை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.