புதரில் குவிந்து கிடக்கும் கடத்தல் வாகனங்கள்

 

கோவை, ஜன.6: கோவை பாலசுந்தரம் ரோடு வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்கில் சிக்கிய வாகனங்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட கார், வேன், டெம்போ போன்ற வாகனங்கள் புதரில் குவிந்து கிடக்கின்றன. துருப்பிடித்து வீணாகி விடும் நிலையில் இந்த வாகனங்கள் கிடப்பதாக தெரிகிறது. வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து முடிந்த நிலையிலும் முறையாக ஏலம் விடாமல் இருப்பதாக தெரிகிறது.

இந்த வாகனங்களை தொடர்ந்து புதரில் இருப்பதால் மேலும் சேதம் அதிகமாகி விடும். பழைய இரும்பாக எடைக்கும் போகும் நிலையில் வாகனங்கள் பரிதாபமான நிலைமைக்கு சென்றுவிட்டன. மேலும் பழுதான வாகனங்களால் அந்த பகுதியில் இட நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது. கடத்தல் வாகனங்கள் மீதான நடவடிக்கை மற்றும் ஏலம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். வாகனங்களை இரும்பு குவியலால் தொடர்ந்து குவிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதரில் குவிந்து கிடக்கும் கடத்தல் வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: