இதுபற்றி சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 1வது தெருவை சேர்ந்த இளையராஜாவை கைது செய்தனர். தனியார் கம்பெனியில் பணியாற்றிவரும் மேலாளர் ஒருவருக்கு கார் டிரைவராக உள்ளார். மனைவி, மகள் உள்ளனர். இவரது முதலாளி வெளிநாட்டுக்கு சென்றதால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றிவந்தபோது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வீட்டில் தனியாக இருந்தபோது 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது appeared first on Dinakaran.