இதனையடுத்து லதா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர், சத்தம் கேட்டு வெளியே வந்து மகனைக் காப்பாற்ற முற்பட்டபோது அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு லதா திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து லதா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம் : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் தணிகாச்சலம் (54). இவர் தனது வீட்டுமுன் லைனிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தணிகாச்சலம் கடையில் இருந்தபோது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர், அருண், சுந்தரி ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கையில் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைப்பால் தணிகாச்சலத்தை பலமாக தாக்கியுள்ளனர். மேலும் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தணிகாச்சலம் கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குடிபோதையில் வந்ததை தட்டி கேட்டதால் தாய், மகன் மீது தாக்குதல் appeared first on Dinakaran.