×

அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்ட பயனாளிகளுடன் கலெக்டர் சந்திப்பு

கரூர், ஜன. 4: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டம் & நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் தங்கவேல், நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் மூலம் நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வு குறித்து கலெக்டர் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை குறைத்திட விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமில்லா உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கான இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டம் இந்த திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுதும் இந்த திட்டத்தின் கீழ் தற்போது 1400 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 3 அரசு மருத்துவமனைகள் மற்றும் 5 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 9 மருத்துவமனைகள் இநத திட்டத்தில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்கள், வெளிநாட்டவர், வெளிமாநிலத்தவர் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துக்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் எந்தவித கட்டணம் இன்றி முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ சிகிச்சை பெறலாம்.அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் இநத திட்டத்தின் மூலம் கடந்த மூன் றரை ஆண்டுகளில்4 அரசு மருத்துவமனைகளில் 5480 நபர்களுக்கு ரூ. 3,46,33,780 மதிப்பிலும், 5 தனி யார் மருத்துவமனைகளில் 198 நபர்களுக்கு ரூ. 2,84,095 மதிப்பிலும் என மொத்தம் 6,699 பேருக்கு ரூ. 4,84,61,370 மதிப்பில் சிகி ச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

The post அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்ட பயனாளிகளுடன் கலெக்டர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,District ,Thangavel ,Karur Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம்; கரூர்...