×

கரூர் அருகே இன்ஜி. மாணவனுக்கு உருட்டுக்கட்டை அடி

 

வேலாயுதம்பாளையம், ஜன. 5: கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே கிழக்கு தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் கவின்(20). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். தந்தை வீரனுக்கு உடல்நிலை சரியில்லாததால், கவின் பண்டுதகாரன்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஓட்டலில் பகுதி நேர சப்ளையராகவும் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் ஓட்டலில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்ந்தார். அப்போது கவினின் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் ராஜவேலு, சஞ்சய் இருவரும் கவினுக்கு போன் செய்து எங்களிடம் உங்கள் ஊரை சேர்ந்த மோகன்ராஜ், ஜஸ்வந்த், வசந்த் ஆகிய மூன்று பேரும் தகராறு செய்வதாக கூறியுள்ளனர். அதன் காரணமாக கவின், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று 3 பேரிடமும் ஏன் தகராறு செய்கிரீர்கள் என்று கேட்டபோது அவர்கள் 3 பேரும் கவினை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இதனால் காயமடைந்த கவினை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.வேலாயுதம்பாளையம் போலீசார் தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் வசந்த்(20) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

 

The post கரூர் அருகே இன்ஜி. மாணவனுக்கு உருட்டுக்கட்டை அடி appeared first on Dinakaran.

Tags : Karur, Eng. ,Velayudhampalayam ,Veeran ,East Thavutupalayam ,Thalavapalayam ,Karur district ,Kavin ,Kavin Banduthakaranputhur… ,Karur, Eng ,
× RELATED கயிறு இழுக்கும் இந்திய அணிக்கு தேர்வு...