கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப்பதிவு மூலம் கிடைத்த வருவாய் 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் சேவைகள் மூலம் 98 லட்சத்து 47 ஆயிரத்து 334 பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கடந்த 2024ம் ஆண்டு 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் ரூ.10,076.64 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது 2023ம் ஆண்டை விட 33.29 சதவீதம் அதிகம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்தாண்டு 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதேநேரம் கடந்த 2023ம் ஆண்டு 18.26 லட்சமும், 2022ம் ஆண்டு 17 லட்சமும், 2021ம் ஆண்டு 15.15 லட்சமும் வாகனங்கள் பதிவாகி இருக்கின்றன. அதேபோல் தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.10 ஆயிரத்து 76 கோடியே 64 லட்சம் வருவாய் 2024ம் ஆண்டில் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 33.29 சதவீதம்.
கடந்த 2023ம் ஆண்டு ரூ.7 ஆயிரத்து 560 கோடியும், 2022ம் ஆண்டு ரூ.6 ஆயிரத்து 449 கோடியும், 2021ம் ஆண்டு ரூ.5 ஆயிரத்து 10 கோடியும் வருவாய் கிடைத்தது. தமிழகத்தில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்திலும். பூந்தமல்லி ஆர்டிஓ 2வது இடத்திலும், 3வது இடத்தில் கோவை வடக்கும் உள்ளன. அதிக வருவாய் ஈட்டி தருவதில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆர்டிஓ அலுவலங்கள் உள்ளன. தேசிய அளவில் வாகன பதிவில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப்பதிவு, வாகனப்பதிவை புதுப்பித்தல் உள்ளிட்டசேவைகள் மூலம் 98 லட்சத்து 47 ஆயிரத்து 334 பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அதிக பரிமாற்றங்களை மேற்கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்கில் கேரளா, கர்நாடகம், உத்தரபிரதேசம், மகாராஷடிரா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. வாகனங்கள் பதிவு உள்ளிட்டவை மூலம் அதிக வருமானம் ஈட்டிய மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், கர்நாடக 2வது இடத்திலும், 3வது இடத்தில் தமிழ்நாடும், 4வது இடத்தில் உத்தரபிரதேசமும், 5வது இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப்பதிவு வருவாய் 33 சதவீதம் அதிகரிப்பு: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.