ஐயப்பன் அறிவோம் 40: காவலுக்கு கருப்பன்

தேங்காய் முக்கண்ணில் ஒரு கண் வழியாக நெய்யை ஊற்றி, அதனை முத்திரையிட்டு, ஒரு துணிப்பையில் மன்னர் கட்டினார். இரு முடிச்சுகளில் முன்முடிச்சில் நெய் தேங்காய், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, விபூதி, சந்தனம், கற்பூரம், பத்தி உள்ளிட்ட பூஜைப்பொருட்களுடன், நிவேதனப் பொருட்கள், தேன், கரும்பு, கற்கண்டு, முந்திரி, உலர்திராட்சை, ஐயப்பனின் விருப்ப உணவான அப்பம், அரவண பாயசம் உள்ளிட்ட உணவுகள் மற்றும் குரு தட்சணையை முடிச்சில் இட்டு கட்டினார்.

மறு முடிச்சில் ஐயப்பனின் பரிவார தலைவன் கருப்பணசாமிக்கு சுருட்டு, பரிவாரம் கடுத்த சாமிக்கு அவல், பொரி, கடலை, பூதகணம் வாபூரணனுக்கு வெண்மிளகு, கல் உப்பு, நாகராஜனுக்கு (நாகம்) மஞ்சள், பன்னீர், மஞ்சமாதாவிற்கு குங்குமம், மஞ்சள், வஸ்திரம் (துணி) உள்ளிட்ட பொருட்களையும், வழியில் பூதகணங்கள் தேங்காய் உடைக்க தேவையான பூஜை பொருட்கள் அனைத்தையும் வைத்து கட்டினார்.

தான் வீட்டை விட்டு புறப்படுவதால், இல்லாத நாளில் நாட்டின் மீது எதிரிகள் படை எடுக்கலாம் அல்லது வளத்தை சுரண்ட வரலாம் என கருதிய மன்னர், வீட்டிற்கு காவலாக வீரர்கள் இருந்தாலும் தம்மை போன்ற ஆளுமைமிக்க, வலிமையான வீரர் வேண்டும் என எண்ணினார்.
அப்போது பக்தர் விரதமிருந்து தன்னை காண சபரிமலைக்கு புறப்பட்டால், பக்தரின் வீட்டைக் காக்க தனது பரிவாரத்தின் தலைவரான கருப்பணசாமியை அனுப்பி வைப்பேன் என ஐயப்பன் கூறியது நினைவிற்கு வருகிறது.

இதனால் கருப்பணசாமியை நினைத்து அரண்மனை வாயில் முன்பு ஒரு பாறையை கருப்பனாக அமைத்து, அவருக்கு மஞ்சள் நீர் தெளித்து, சந்தனம், குங்குமம், மாலையிட்டு, படையல்கள் படைத்து பூஜைகள் செய்தார். மன்னர் காட்டு வழியாக நடந்து செல்வதால் அவருக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்கும், மகனை (ஐயப்பன்) காணச் செல்லும் மங்கல வைபவம் என்பதாலும் கிருமிநாசினியான மஞ்சள் அரைத்து, பாதங்களில் பூசி, சந்தனம், குங்குமம் இட்டு மலர் தூவி பாதை பூஜை செய்கிறார் ராணி.

அதன்பிறகு சிதறு தேங்காய் உடைத்து புறப்பட தயாரானார் மன்னர். அகத்தியர் கூறிய வழிநடை மந்திரங்கள், சரணங்களை கூறிக்கொண்டு தனது தலையில் இருமுடி தாங்கி புறப்பட்டார் மன்னர் ராஜசேகரபாண்டியன். சாமியே சரணம் ஐயப்பா
(நாளை தரிசிப்போம்)
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு

The post ஐயப்பன் அறிவோம் 40: காவலுக்கு கருப்பன் appeared first on Dinakaran.

Related Stories: