×

உதகை அருகே கரடி தாக்கியதால் தொழிலாளி பலி: வனத்துறை உறுதி

நீலகிரி: உதகை அருகே தொழிலாளி சதீஷை தாக்கி கொன்றது கரடிதான் என வனத்துறை உறுதி செய்துள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் கரடியை பிடிக்க 7 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரடியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சத்தியமூர்த்தி
நகர் பகுதியில் கூண்டுகள் வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக ரூ.50,000 நிவாரண நிதியை வனத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

The post உதகை அருகே கரடி தாக்கியதால் தொழிலாளி பலி: வனத்துறை உறுதி appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Nilgiri ,Satish ,Udagai ,Sathyamurthi Nagar ,Dinakaran ,
× RELATED காவிரி கரையோரம் பிலிகுண்டுலுவில்...