- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஆலை
- சதுர்
- கே. ஸ்டாலின்
- பொம்மையபுரம்
- வச்சகரபட்டி காவல் நிலையம்
- விருதுநகர்
- தின மலர்
சென்னை: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.இந்த பட்டாசு ஆலையில் உள்ள 35 அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் பட்டாசு உற்பத்திக்கான வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது உராய்வு காரணமாக காலை 9.40 மணி அளவில்திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாயின. ஆலையில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முகமது சுதீனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
The post பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு! appeared first on Dinakaran.