×

இந்தியாவில் முதன்முறையாக பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ்: ஒன்றிய, மாநில அரசுகள் அலர்ட்

பெங்களூரு: இந்தியாவில் முதன்முறையாக பெங்களூருவில் 3 மாத பெண் குழந்தை, 8 மாத சிறுவனுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒன்றிய, மாநில அரசுகள் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. சீனாவிலிருந்து வேகமாக பரவிவரும் மனிதர்களை தாக்கும் மெட்டானுமோ வைரஸ் (எச்.எம்.பி.வி) குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்பட்டாலும், இந்தியாவில் இந்த வைரசின் தாக்கம் இல்லை என்றே கூறப்பட்டது.

எனினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டு மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுமியின் உடலில் தொற்று கண்டறியப்பட்டதாக பெங்களூருவில் இருக்கும் பாப்டிஸ்ட் மருத்துவமனை உறுதிப்படுத்தி உள்ளது. அதேபோல் 3 மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த 2 குழந்தைகளுக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மாநில சுகாதாரத் துறை இந்த விஷயம் குறித்து ஒன்றிய சுகாதாரத் துறையிடம் தெரிவித்துள்ளது.

தொற்று தொடர்பான மாதிரிகள், நாட்டின் பிற ஆய்வகம் மற்றும் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வைரசின் தாக்கம் குறித்து கண்டறியப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலம் எச்.எம்.பி.வி வைரஸ் பரவுகிறது. மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தலைவலி, சோர்வு, இருமல், காய்ச்சல் அல்லது குளிர் ஆகியவை தொற்றுக்கான அறிகுறிகள் என்று சுகாதாரத்துறையினர் கூறினர்.

The post இந்தியாவில் முதன்முறையாக பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ்: ஒன்றிய, மாநில அரசுகள் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : India ,Bengaluru ,Union ,China… ,governments ,Dinakaran ,
× RELATED நட்புரீதியில் கால்பந்து 14 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி