சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்: செல்வப்பெருந்தகை

சென்னை: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளபக்கத்தில் கூறியதாவது, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அப்பைய நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன்.பட்டாசு ஆலைகள், கிடங்குகளிலும் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடைபெறுவதும், அதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறான வெடி விபத்துகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும்.பட்டாசு ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கிறது.

இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லாத மாநிலமாக உருவாக்கிட தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். படுகாயமடைந்த அனைவருக்கும் உயரிய சிகிச்சை அளிக்கவேண்டும். சிகிச்சையை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இந்த கோரவிபத்தில் உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்த அனைவருக்கும் அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: