இந்நிலையில் பல்வேறு கிராமப் பஞ்சாயத்துகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சிகளுடன் இணைக்கவும் செய்யப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் ஜனவரி 5ம் தேதியான நேற்றுடன் நிறைவடைந்தது. தற்போது வரை தேர்தல் நடக்காத நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் தேர்தல் நடத்தப்படாமலேயே போகலாம் என கூறப்படுகிறது.
அந்தப் பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் எஞ்சியுள்ள கிராமப் பஞ்சாயத்துக்களின் பொறுப்புகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 9.624 கிராம ஊராட்சிள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் வரையில், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகங்களை இந்த சிறப்பு அதிகாரிகள் கவனிப்பார்கள்.
The post தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.