தேனி: ஆண்டிபட்டி அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயார் செய்து தப்பி ஓடிய நபரை கடமலைகுண்டு போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். காட்டுப் பன்றிகளை வேட்டையாடி இறைச்சிக்காக விற்பனை செய்தவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மச்சக்காளை என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்கிடையில் துணியால் சுற்றி வைத்திருந்த 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post ஆண்டிபட்டி அருகே 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.