×

தேனி வீரபாண்டி பகுதியில் 2ம் போக நெல் நடவு பணி தீவிரம்

தேனி, ஜன. 4: தேனி அருகே வீரபாண்டி பகுதியில் முல்லை ஆற்று பாசன பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரியாறு அணையின் நீரினை ஆதாரமாகக் கொண்டு தேனி மாவட்டத்தில் கூடலூர் துவங்கி தேனி பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரம் எக்டர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இதில் வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக வயல்களில் உழவுப் பணியும் நெல்பாவும் பணிகளும், நெற்கதிர் நடவு செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. வீரபாண்டி பகுதியில் உள்ள வயல் வழிகளில் இரண்டாம் கட்ட நெல் நடவு பணிகளைத் தொடர்ந்து உரமிடுதல் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

The post தேனி வீரபாண்டி பகுதியில் 2ம் போக நெல் நடவு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Mullai Atru ,Veerapandi ,Gudalur ,Palanisettipatti ,Periyar dam ,
× RELATED தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது