இது தொடர்பாக அந்த மாணவி, ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் துர்கா விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் ஜியாவுதீனை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் பேராசிரியர் ஜியாவுதீன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
பேராசிரியரின் பாலியல் தொல்லை குறித்து கல்லுரியின் உரிமையாளர் நாம்தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன், பொறுப்பாளர்கள் அன்வர் கபீர், கபூர் யாசின் மற்றும் பேராசிரியர் ஜியாவுதீன் தம்பியான ரசீன் ஆகியோரை கடந்த மாதம் நேரில் சந்தித்து தகவல் தெரிவித்தேன். நீ இங்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால் ஜியாவுதீனிடம் அனுசரித்து நடந்து கொள் என்று அவர்கள் கூறினர். உன்னை பாஸ் பண்ண விடாமல் செய்து உன் எதிர்காலத்தை சீரழித்து விடுவோம் என்று கூறி மிரட்டினர். எனவே, ஜியாவுதீனுக்கு உடந்தையாக இருந்த இவர்கள் மீது நவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
The post பாலியல் தொல்லை பேராசிரியருக்கு உடந்தையாக இருந்த நாதக மாநில நிர்வாகி உள்பட 5 பேரை கைது செய்ய வேண்டும்: கல்லூரி மாணவி பரபரப்பு புகார் appeared first on Dinakaran.