கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு!

கோவை: கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். டேங்கர் லாரி விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்ற எல்.பி.ஜி. டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி வாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்து வாயு கசிவதால் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டேங்கர் லாரியில் இருந்து 4 மணி நேரமாக எரிவாயு கசிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு, டேங்கர் லாரியை கிரேன் மூலம் தூக்க முயற்சித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் 1 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதிக்கு வராமல் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஈர துணியை வைத்து டேங்கரில் ஏற்பட்ட துளையை தீயணைப்பு துறை வீரர்கள் அடைத்துள்ளனர்.

 

The post கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: