பெரம்பலூர், ஜன.3: பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2A தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம் பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக முன்னனி பயிற்சி நிறுவனம் மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2, குரூப்-2A தேர்வுகளுக்கும், இந்தத் தேர்வுகளில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு (மெயின்) தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்க ளுக்கும் பயிற்சி அளிக்கப் பட உள்ளது.
இந்தப் பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21முதல் 32 வயது நிரம்பிய ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினத்தைச் சேர்ந்தவர் களாக இருக்க வேண்டும், விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையும் தாட் கோவால் மேற்கொள்ளப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்திட www.tahdco.com http:www.tahdco.com என்ற தாட்கோ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து, பயிற்சிபெற்றுப் பயனடை யுமாறு மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடி இன மாணவர்களுக்கு போட்டிதேர்வு பயிற்சி appeared first on Dinakaran.