×

தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

 

கோவை, ஜன. 3: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு கோவை மாநகர் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் அண்ணாசிலை அருகே மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி, கோவை மாநகர் வட்ட மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார், மாநகர் வட்ட செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள், மின்விசிறிகளை இயக்க வேண்டாம். மின்விசிறிகளுக்கு எலக்ட்ரானிக் ரெகுலேட்டரை பயன்படுத்தலாம். பழுதான வயர்களை பயன்படுத்த வேண்டாம். மின்சாரத்தை வீணடிக்காமல் சேமிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, அவர்கள் பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அண்ணாசிலை அருகே துவங்கிய பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

The post தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : National Electricity Conservation Week Awareness Rally ,Coimbatore ,Tamil Nadu Electricity Board ,Electricity Conservation Week ,Coimbatore Municipal Electricity Distribution Circle ,Annasilai… ,Dinakaran ,
× RELATED நீதிபதிகள் குடியிருப்பில் மின்கட்டண...