×

 ராமகிருஷ்ணா பல்மருத்துவ கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா

கோவை, ஜன.5: கோவை  ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா கோவை எஸ்என்ஆர் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. மதுரை எம்எஸ்ஆர் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 93 மாணவர்களுக்கு இளங்கலை பட்டமும், 9 மாணவர்களுக்கு முதுகலை பட்டமும் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 12 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டது. பெஸ்ட் அவுட்கோயிங் மாணவருக்கான தங்கப் பதக்கம் இளங்கலை மாணவி ஸாதிகா விற்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்என்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், கல்லூரியின் முதல்வர் டாக்டர் தீபா ஆனந்தன், கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post  ராமகிருஷ்ணா பல்மருத்துவ கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : 20th convocation ceremony ,Ramakrishna Dental College ,Coimbatore ,convocation ceremony ,SNR Auditorium ,Dr. ,Prakash ,Principal Physician ,Madurai MSR Hospital ,Dinakaran ,
× RELATED கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து: ஓட்டுநர் மீது வழக்கு