யுனைடட் கோப்பை டென்னிஸ் இகாவால் அரையிறுதியில் போலந்து

சிட்னி: யுனைடட் கோப்பை குழு டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தன. இந்த காலிறுதி சுற்று ஒன்றில் போலாந்து-இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. முதலில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போலாந்து வீரர் ஹூபர்ட் ஹர்கரஸ்(27வயது, 16வது ரேங்க்) 7-6(7-3), 7-5 என நேர் செட்களில் இங்கிலாந்து வீரர் பில்லி ஹாரிசை(29வயது, 125வது ரேங்க்) வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி 45நிமிடங்கள் நடந்தது.

அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனையான போலாந்தின் இகா ஸ்வியாடெக்(23வயது, 2வது ரேங்க்), இங்கிலாந்து வீராங்கனை கேத்தி பவுல்டர்(28வயது, 24வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் இகா 2மணி 57நிமிடங்கள் கடுமையாக போராடி 6-7(4-7), 6-1, 6-4 என்ற செட்களில் வென்றார்.

மொத்தம் 3 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் முதல் 2 ஆட்டங்களில் போலாந்து வென்று முன்னிலை பெற்றதுடன் வெற்றியையும் உறுதி செய்தது. அதனால் இரு அணிகளுக்கு இடையே 3வதாக நடக்க இருந்த கலப்பு இரட்டையர் ஆட்டம் நடைபெறவில்லை. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா, கஜகஸ்தான் அணிகளை தொடர்ந்து போலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறியது. முதல் அரையிறுதியில் கஜகஸ்தான்-போலந்து அணிகள் மோத உள்ளன.

The post யுனைடட் கோப்பை டென்னிஸ் இகாவால் அரையிறுதியில் போலந்து appeared first on Dinakaran.

Related Stories: