×

ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறிப்பு

தூத்துக்குடி, ஜன. 3: ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லக்கண்ணன்(50), நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி பூ மார்க்கெட்டுக்கு வந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் 4 பேர், செல்லக்கண்ணனிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், தூத்துக்குடி போல்டன்புரம், ஜார்ஜ் ரோடு மீனவர் காலனி பகுதிகளை சேர்ந்த 4 சிறுவர்கள் செல்போனை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 16, 17 வயது சிறுவர்கள் இருவரை கைது செய்த போலீசார் அவர்களை பாளை. கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

The post ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Selakkannan ,Alwarthurnagar ,Thoothukudi Flower Market ,Central Police ,
× RELATED தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய சாலைப்பணி