×

நாட்டு துப்பாக்கியால் வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நரிக்குறவர் கைது

திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே வளர்ப்பு நாயை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நரிக்குறவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு (55). விவசாயியான இவர், நேற்று முன்தினம் காலை தனது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு வயலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாகச் சென்ற நரிக்குறவரை பார்த்து அவரது வளர்ப்பு நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் வளர்ப்பு நாயை சுட்டுள்ளார். இதில் அந்த வளர்ப்பு நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஆசையாக வளர்த்து வந்த நாயை தனது கண் எதிரிலேயே சுட்டுக்கொன்றதால், வேதனையடைந்த விவசாய டில்லிபாபு, இதுகுறித்து பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஷாங்காட் (60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாட்டு துப்பாக்கியால் வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நரிக்குறவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Pallipattu ,Dillibabu ,Ramachandrapuram ,Tiruvallur district ,Fox ,
× RELATED திருத்தணியில் பரபரப்பு வீட்டின் கதவை...