×

கோயில் உண்டியலில் ரூ.30 ஆயிரம் திருட்டு

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நெய்த வாயல் ஊராட்சியில் உள்ள பிடாரி கவுத்தி அம்மன் கோயில் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக புனரமைப்பு பணிகள் செய்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. உண்டியலில் சேரும் பணத்தை ஆண்டிற்கு ஒரு முறை தை மாத விசேஷ நாட்களில் எடுத்து செலவு செய்வது வழக்கமாக நிர்வாகிகள் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் சிறப்பு வழிபாடு செய்த நிலையில் நெய்த வாயல் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து, ரூ.30 ஆயிரம் காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post கோயில் உண்டியலில் ரூ.30 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Kavthi ,Amman ,Neytha Vayal panchayat ,Meenjur ,Thai… ,
× RELATED மாமண்டூர் அருகே பரபரப்பு கம்பி லோடு...