தேவையான பொருட்கள்:
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
வாழைத்தண்டு-2கப்.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-5.
உப்பு-தேவையான அளவு.
பால்-1/4 கப்.
துருவிய தேங்காய்-1கப்.
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து 1 குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி,பச்சை மிளகாய் 5, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டு 2 கப் சேர்த்துக்கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இது வேக தண்ணீர் 1 கப் ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு வைத்துவிடவும். வாழைத்தண்டு நன்றாக வெந்ததும் அதில் காய்ச்சிய பால் 1/4கப் சேர்த்து அத்துடன் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்தால் வாழைத்தண்டு பால் கறி தயார்.
The post வாழைத்தண்டு பால் கறி appeared first on Dinakaran.