×

சிறுமியை காதலித்து திருமணம் செய்த கணவன் மீது போக்சோ வழக்கு செய்யாறு அருகே

செய்யாறு, டிச. 27: செய்யாறு அருகே சிறுமியை காதலித்து திருமணம் செய்த கணவன் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா பகுதியைச் சேர்ந்தவர் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி. இவரது 15 வயது மகளை சேராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் (21), அறுவடை இயந்திர டிரைவர், இவர் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர்கள் வயது குறைவாக இருப்பதால் திருமணம் செய்ய மறுத்து அறிவுரை கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த 5.10.2023-ம் தேதி அன்று சேராம்பட்டு எல்லை அம்மன் கோவிலூக்கு சிறுமியை வரவழைத்து நாம் திருமணம் செய்து கொண்டால் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு ஒரு வருடமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி காலை வயிற்று வலி காரணமாக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தபோது அந்தச் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்து உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் உடல் நலக்குறைவால் சிறுமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதும் தெரிய வந்தது. 15 வயது சிறுமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதையடுத்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சிறுமி கொடுத்து புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராணி சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதாக விஜயராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சிறுமியை காதலித்து திருமணம் செய்த கணவன் மீது போக்சோ வழக்கு செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Tags : Cheyyar ,POCSO ,Vembakkam taluka ,Tiruvannamalai district ,
× RELATED புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு...