நாகூரில் ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெரு, பூங்காவிற்கு நாகூர் ஹனிபா பெயர் வைத்த முதல்வருக்கு நன்றி

நாகபபட்டினம்,ஜன.1: நாகூரில் ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெரு மற்றும் பூங்காவிற்கு இசை முரசு நாகூர் ஹனிபா பெயர் வைத்த முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர்களுக்கு நாகப்பட்டினம் நகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நாகப்பட்டினம் நகராட்சி கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையர் லீனாசைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைத்தலைவர்: நாகப்பட்டினம் நகராட்சியில் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் புதிதாக பைப் லைன் பதிக்கப்படுகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் உடைப்புகள் ஏற்படுகிறது. உடைப்புகள் ஏற்படாமல் பைப் லைன் பொருத்தும் பணியை கண்காணிக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நகராட்சி சார்பில் பல கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஆனால் இதை யாரும் கண்காணிப்பது இல்லை.

தலைவர்: இனிவரும் காலங்களில் இது போல் நடந்தால் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி நிறுத்தப்படும்.
திலகர்: நகராட்சி ஆணையர் பல ஆண்டு காலமாக தங்கி இருந்த வீட்டை இந்து சமய அறநிலையத்துறையினர் முன் அறிவிப்பு இன்றி சீல் வைத்து சென்றுள்ளனர். அந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமாக இருந்தாலும் அனுபவத்தில் இருக்கும் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்காமல் நடவடிக்கை எடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

முகம்மதுநத்தர்: நாகூரில் ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெரு மற்றும் நாகூரில் புதுபிக்கப்பட்ட பூங்காவிற்கு இசை முரசு நாகூர் ஹனிபா பெயர் வைத்த முதல்வர், துணை முதல்வர், நாகப்பட்டினம் எம்எல்ஏ, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர், நகர்மன்ற தலைவர் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சாக்கடை தூய்மை செய்யும் பணியில் ஈடுபடுவோர்கள் எதற்கு குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுகின்றனர். குப்பை அள்ளும் பணிக்கு தனியாக டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே சாக்கடை து£ய்மை செய்யும் பணியில் ஈடுபடுவோர்களை குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுத்த கூடாது.சித்ரா: 27 வது வார்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் நகர்புற சுகாதார மையம் அமைக்க காரணமாக இருந்த தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர், நகர்மன்ற தலைவர் ஆகியோருக்கு வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாங்கொட்டை சுவாமி தெருவில் மழை நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.முகம்மதுஷேக்தாவூது: புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்க மாதாந்தோறும் ரூ.1000 வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.இவ்வாறு விவாதம் நடந்தது.
அரசு உதவி பெறும் பள்ளிகளின்

The post நாகூரில் ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெரு, பூங்காவிற்கு நாகூர் ஹனிபா பெயர் வைத்த முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: